தேனி: பெரியகுளம் பகுதி அ.தி.மு.க. பிரமுகரிடம் ரூ.50 லட்சம் திருட்டு போனது தொடர்பான வழக்கில், அவரது கார் டிரைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த  காங்கிரஸ் நிர்வாகி உள்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் தேனி மாவட்ட  செயலாளராக இருந்து வருகிறார் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன்.  இவர் அந்த பகுதியல் மின்ரல் வாட்டர் கம்பெனி மற்றும் மினரல் வாட்டர் சப்ளை செய்து வருகிறார். இவரிடம் கார் டிரைவராக ஸ்ரீதர் என்பவர் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அதனால், அவர்மூலம் பணம் கொடுக்கல் வாங்கலை நாராயணன் செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 27ந் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் செல்ல திட்டமிட்ட நிலையில்,    தன்னிடம் இருந்த ரூ.50 லட்சம் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு டிரைவரில் ஸ்ரீதரிடம் கூறி விட்டு, வேறு காரில் சென்று விட்டார். இந்த நிலையில்,  ஸ்ரீதர் ரூ.50 லட்சத்துடன் மாயமானார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் ஸ்ரீதர் மனைவியும் மாயமானார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தனிப்படை அமைத்து ஸ்ரீதரை  தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீதர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடமாடுவதை அவரது போன் சிக்னல் மூலம் அறிந்த தனிப்படையினர், அவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை, பெரியகுளத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியபின் பணத்தை திருடியதை ஒத்துக்கொண்டார். மேலும் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

நாராயணன் அடிக்கடி தனது டிரைவர் ஸ்ரீதரிடம் கொடுத்து அதனை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறி வருவது குறித்து,.தனது உறவினரான பெரியகுளம் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர் மற்றும் மற்றொரு உறவினரான பாலகிருஷ்ணன் ஆகியோருடன் கூறியிருக்கிறார். அவர்கள் கொடுத்த யோசனையின்படி, ரூ.50லட்சத்தை  அபகரித்த ஸ்ரீதர், அந்த ரூ.50 லட்சத்தில் குறிப்பிட்ட தொகையை  தனது உறவினரான பெரியகுளம் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர் மற்றும் மற்றொரு உறவினரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு கொடுத்து  விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மீதி தொகையை வேறு சிலரிடம் கொடுத்து வைப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற நேரத்தில், அவரை காவல்துறையினர்  சுற்றி வளைத்து தூக்கினர். இதையடுத்து, காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  . கைதான 3 பேரும் கோ ர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

[youtube-feed feed=1]