சென்னை:  பாஜக மற்றும் அதிமுகவில் எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக  ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், பாஜக, அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் ஏமாற்றி விட்டதாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பாஜக தலைவர்புவனேஷ் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்நிலையில் புவனேஷ் குமார் கடந்த 30-ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அவரது புகார் மனுவில், ஆரணி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விரும்பி,   சீட்டு கேட்டு, சென்னை பெரம்பூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் விஜயராமனை அணுகினேன். அவர்மூலம்,  மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான நரோத்தமனை சந்தித்ததாகவும், அவர்கள் எம்.எல்.ஏ சீட் வேண்டுமென்றால் ரூல 1 கோடி ரூபாய் வேண்டும் என தெரிவித்ததாகவும், தான்  விஜயராமன் மற்றும் நரோத்தமன் ஆகியோரிடம் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், எனக்கு ஆரணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை,. சீட் வாங்கித்தருவாக, தன்னிடம் இருந்து  பணத்தை வாங்கிய நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக பிரமுகர் விஜயராமன், அவரது மகன் சிவபாலாஜி ஆகியோரிடம் பணத்தை கேட்டதாகவும், அவர்கள் தர மறுத்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் பாண்டி பஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக மத்திய அமைச்சர் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக பிரமுகர் விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவபாலாஜி ஆகிய 4 பேர் மீது 294(பி) – ஆபாசமாக திட்டுதல், 406 – நம்பிக்கை மோசடி, 420 – பண மோசடி, 506(1) – கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  புகார் தொடர்பாக அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.