சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும்  லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

2024 – 2025-ம் ஆண்டில், திமுகவுக்கு  மார்ட்டின் பங்குதாரராக உள்ள டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனமானது 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. ஏற்கனவே  2019-ல் இருந்து 2024 வரை, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம், திமுகவுக்கு 509 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கயது குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே தேசிய கட்சிகளில் பாஜக வரலாறு காணாத அளவுக்கு  ரூ.6,088 கோடி நன்கொடை பெற்றுள்ளது வெளிச்சத்துககு வந்துள்ளது. இது  காங்கிரசை விட 12 மடங்கு அதிகம் என விமர்சிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக, சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும்  லாட்டரி அதிபரான மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து அதிகஅளவில் நன்கொடை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவை தளமாகக் கொண்டு செயல்படும் டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனத்தில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நெருங்கிய நண்பரான சுப்பையன் நாகராஜன் பங்குதாரராக உள்ளார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட லாட்டரி நிறுவனமானது, 2024- 2025-ம் ஆண்டுகளில் திமுகவுக்கு அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி, கடந்த 2024 – 2025-ம் ஆண்டில், திமுகவுக்கு டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனமானது 50 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வழங்கி இருப்பது அம்பலமாகியுள்ளது. அதேபோல, 2019-ல் இருந்து 2024 வரை, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம், திமுகவுக்கு 509 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு ரூ.12 லட்சமும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.216 கோடியும் பாஜகவுக்கு ரூ.2,180 கோடியும் கொடுத்துள்ளது.

இதுபற்றிப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்தப் பங்களிப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், லாட்டரியை திமுக தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்காது” எனவும் கூறினார்.

பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தில் உள்ள விவரங்களின்படி, லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் சுப்பையன் நாகராஜன், டைகர் அசோசியேட்ஸின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார். இந்நிறுவனம் தமிழ்நாட்டில்,   எந்த வணிக நடவடிக்கைகளும் இல்லாதபோதிலும், அந்த நிறுவனம் 2024-25 ஆம் ஆண்டில் திமுகவிற்கு ரூ. 50 கோடியும், அதிமுகவிற்கு ரூ. 60 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை, இந்த பங்களிப்பு அந்த ஆண்டிற்கான அதன் மொத்த அறிவிக்கப்பட்ட நன்கொடைகளில் சுமார் 90% ஆகும் என்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.

ஒரு லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகள் குறித்து தனக்குத் தெரியாது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் டி ஜெயக்குமார் கூறிய நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்த பங்களிப்பு நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறினார். “ஆனால், தமிழகத்தில் லாட்டரியை திமுக ஒருபோதும் அனுமதிக்காது,” என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், கட்சியின் நிதி பெரும்பாலும் அதன் தொண்டர்களின் பங்களிப்புகளிலிருந்து வருகிறது என்று திமுக தலைவர்கள் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, திமுக பெற்ற மொத்த ரூ. 365 கோடி நன்கொடைகளில், சுமார் ரூ. 299.8 கோடி சிறிய நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மூலம் ரூ. 2,000-க்கும் குறைவான நன்கொடைச் சீட்டுகள் மூலம் திரட்டப்பட்டது.

சமீப நாட்களாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பாஜகவுக்கு அதிக அளவு நன்கொடைகள் குவிந்துள்ளது குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது திமுகவுக்கு அதிக அளவில் நன்கொடைகள் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

2024–25 நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி ரூ.6,088 கோடி நன்கொடைகள் பெற்றுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நன்கொடை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.522 கோடி மட்டுமே நன்கொடையாக பெற்றுள்ளது.

இந்த கணக்கின் படி, காங்கிரஸை விட பாஜக பெற்ற நன்கொடை தொகை சுமார் 12 மடங்கு அதிகமாக உள்ளது. கடந்த 2023–24 நிதியாண்டில் பாஜக ரூ.3,967 கோடி நன்கொடை பெற்றிருந்த நிலையில், 2024–25ல் அந்த தொகை 53 சதவீதம் உயர்ந்துள்ளது.

பாஜக பெற்ற நன்கொடைகளில் பெரும்பகுதி தேர்தல் நம்பிக்கை அறக்கட்டளைகள் (Electoral Trusts) மூலம் வந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும், பாஜக நன்கொடைகளில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.

2024–25 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியின் நன்கொடைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

இவ்வாறு நிதி அளித்து வரும்   லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் ‘லட்சிய ஜனநாயகக் கட்சி’ (Latchiya Jananayaka Katchi – LJK) என்ற புதிய கட்சியை டிசம்பர் 2025-ல் தொடங்கினார். இதற்கு முன் பாஜகவில் இருந்த இவர், தற்போது புதுச்சேரியின் அரசியல் சூழலில் மாற்றம் கொண்டுவரவும், மக்களுக்கு உண்மையான ஜனநாயக ஆட்சியை வழங்கவும் இக்கட்சியைத் தொடங்கி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ மூலம் நல உதவிகளை வழங்கி வருகிறார்.

அதுபோல லாட்டரி அதிபரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா என்பவர், ஏற்கனவே விசிகவில் இருந்த நிலையில், திமுக குறித்து விமர்சித்ததால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், விஜய் கட்சியான தவெகவில் இணைந்து, தற்போது பணியாறி வருகிறார்.

திமுகவிற்கு ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலம் வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்!

[youtube-feed feed=1]