ரூ.50, ரூ.100: வதந்திகளை நம்ப வேண்டாம்! மத்திய அரசு

Must read

டெல்லி:
ரூ.50, 100 பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 8ந்தேதி பிரதமர் மோடி கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் நோக்கில் ரூ.500, 1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகள், தபால் அலுவலகங்களில் மாற்று வதற்கான ஏற்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன.
500, 1000 ரூபாய் அடுத்து, பழைய 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ஒரு வகையான வதந்தி யும், தற்போது புதிதாக புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளும் கூடிய விரைவில் தடை செய்யப்பட்டு விடும் என்றும் வதந்தியும் வேகமாக மக்களிடையே பரவி வருகிறது.
50-100
இதன் காரணமாக மக்கள் மேலும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் மக்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற  கட்டுக்கதைகளை மறுக்கும் வகையில், ‘நோட்டு வாபஸ் கட்டுக்கதை அழிப்பு’ என்ற தலைப்பில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில், ‘ரூ.50, ரூ.100 உள்பட எந்த நோட்டுகளையும் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ஆதார மற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த நோட்டுகள் அனைத்தும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதைப்போல புதிதாக வெளியிடப்பட்டு உள்ள ரூபாய் நோட்டுகளில் ‘சிப்’ பொருத்தப்பட்டு உள்ளது என்று வெளியான தகவல்களையும்,
தற்போதைய ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் , பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனி உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்ற தகவல்களையும் மத்திய அரசு மறுத்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

More articles

Latest article