சென்னை:
லிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்க உள்ள ஆரோக்கியராஜ் மற்றும் நாகநாதன் பாண்டி, மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்பு பிரிவில் பங்கேற்கும் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், மற்றும் ரேவதி வீரமணி ஆகிய 5 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்றும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.