சென்னை: ஆவினில் ரூ .5.9 கோடி ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமான ஆவணங்களை அழிக்க உயர் அதிகாரிகளே துணைபோயுள்ளது தெரிய வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியின் ஊழல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது வலதுகரமான பலராமனை ஆவின் நிறுவனத்திலேயே இருக்க வைத்து ஊழல்கள் செய்து வந்தும், அவருக்கு ஆதரவாக சில உயர்அதிகாரிகளும் ஊழல் செய்துள்ளதும், ஆவினின் விற்பனை, நிதி மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் மீது தமிழக கூட்டுறவுச் சட்டத்தின் விதிகளை மீறி விளம்பரங்களுக்காக கோடி ரூபாய் செலவழிப்பதில் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் திமுக ஆட்சி பதவி ஏற்றதும், தணிக்கை அறிக்கையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பல ஊழல்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை, அவை அழிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரததை முழுமையாக விசாரணை நடத்த  பால்வளத்துறை  ஆணையரும், ஆவின் நிர்வாக இயக்குநருமான கே.எஸ்.கந்தசாமி,  தணிக்கைத் துறைக்கு பரிந்துரைத்திருந்தார். இதைத்தொடர்ந்து,  கூட்டுறவு தணிக்கைத் துறையைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகள் ஏழு அவின் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தனர்.

கோட்டை  வட்டார தகவலின்படி, 2018-19 ஆம் ஆண்டிற்கான  ஆவின் செலவுகளை ஆராய்ந்த அதிகாரிகள் தணிக்கை அதிகாரிகள்  குழு, அனுமதிக்கப்பட்ட ரூ .5.63 கோடிக்கு எதிராக விளம்பரங்களுக்காக ரூ ‘.10.74 கோடியை ஆவின் செலவழித்ததாகக் கண்டறிந்துள்ளது. அந்த காலகட்டத்தில் விளம்பரங்களுக்காக மொத்தம் ரூ. 3.04 கோடியை செலவழிப்பதில் கடுமையான முறைகேடுகள் நடந்ததாக இந்த குழுவின்  அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. இந்த கூட்டுறவு  தணிக்கைத் துறையின் தணிக்கை அறிக்கையை ஆவின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போதுரூ .10.37 கோடி செலவில், ஆவின் அதிகாரப்பூர்வ பதிவுகளை ரூ .4.4 கோடிக்கு மட்டுமே பெற்றிருப்பது தெரியவந்தது.

கூட்டுறவு தணிக்கைத் துறையைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகள், ரூ .5.93 கோடி செலவுகளில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை அழிப்பதில் ஆவின் அதிகாரிகளுடன் சில தணிக்கைத்துறை அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூட்டுறவு தணிக்கைத் துறையைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகள் ஆவின் அதிகாரிகளுடன் இணைந்து பதிவுகளை அழிக்க குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆவினில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில், நான்கு அதிகாரிகள் தற்போது துறையில் பணியாற்றி வருகின்றனர், மேலும் மூன்று பேர் ஓய்வு பெற்றவர்கள்.

இதுதொடர்பாக ஆவின் நிர்வாண ஆணையர் அரசுக்கு அளித்துள்ள  அறிக்கையில், ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட  அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை கோரியுள்ளார், மேலும் நிதியை மீட்பதற்காக கூட்டுறவு சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள  அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைககப்பட்டுள்ளது.