டில்லி:

ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி, தான் வெளிநாடு எதற்கும் தப்பி ஓடவில்லை என்றும்  இந்தியாவில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரோட்டோமாக் பென்ஸ் என்பது பிரபல எழுதுகோல் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இவர்களுக்கு நிறைய கிளை கம்பெனிகளும் இருக்கிறது. இதன் தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துது. பிறகு இவர்  மொத்தமாக ரூ.4,232 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கான வட்டியோ, அசலோ ஒருவருடம் ஆகியும்  இவர் கொடுக்கவில்லை.  மொத்தம் 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார். இவர் கொடுத்த 600 ரூபாய் செக் கூட பவுன்ஸ் ஆகி திரும்ப வந்ததும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே இவர் சுவிட்சலார்ந்து நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் எங்கும் செல்லவில்லை என்று விக்ரம் கோதாரி தெரிவித்துள்ளார். அவர்,  இந்தியாவில்தான், உத்தர பிரதேசத்தில்தான் இருக்கிறேன். தற்போது வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் பவுன்ஸ் ஆக கூடிய செக் எதுவும் தான் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர்  எந்த விசாரணையாக இருந்தாலும் எதிர்கொள்ள தயார் என்றும் கூறியுள்ளார்.