சென்னை:  தமிழகத்தில் 1000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநிலம் முழுவதும்,  1000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  ஒரு பேருந்துக்கு தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து ரூ.420 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிகபட்சமாக கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்துகளும் வாங்கப்படவுள்ளன.  விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகளும், கோவை கோட்டத்திற்கு 120 பேருந்துகளும், நெல்லை கோட்டத்திற்கு 130 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 100 பேருந்துகளும் வாங்கப்படவுள்ளன.