சென்னை: மக்களவை தேர்தலின்போது ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4கோடி தொடர்பான, சிபிசிஐடி விசாரணைக்காக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் இன்று 2வது முறையாக ஆஜரானார்.
மக்களவைத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்காக, அழைப்பின் பேரில், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் இன்று 2வது முறையாக ஆஜரானார் .
மக்களவை தேர்தலின்போது, நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப் பட்டது. வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 5ந்தேதி சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் மாநில பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆஜரானார். அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, அவர் மீண்டும் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அதன்படி, கேசவ விநாயகம் இன்று (அக்டோபர் 7ந்தேதி) 2வது முறையாக மீண்டும் விசாரணைக்கு சிபிஐ சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், தென் மாவட்டத்திற்கு செல்லும் ரயிலில் இருந்து ரூ 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அதை எடுத்துச்சென்ற பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வரும், நவீன், பிரதீஷ், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை தமிழ்நாடு அரசு சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணைத்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பணம்ஜகவின் நயினார் நாகேந்திரனுடையது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன,. இதுவரை இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக, பாஜஎ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ் ஆர் சேகர், முரளி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஜூலை மாதம் 25 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரு.4 கோடி பணம் என்னுடையது என ரயில்வே கேண்டீன் உரிமையாளரான முஸ்தபா என்பவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் கூறியிருந்தார். இதையடுத்து முஸ்தபாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும் இந்த பணத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், அவர் பொய்யான தகவலை தெரிவித்தார் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் பின்னர் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
இதை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று விசாரிப்பது கடினம் என்றும், எனவே உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து தான் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கேசவ விநாயகத்திடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி கூறியதால் தற்போது கேசவ விநாயகத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் முன்பு 2வது முறையாக இன்று கேச விநாயகம் விசாரணைக்காக ஆஜரானார்.