சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,62,036 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ .4,60,17,979 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர். இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4 லட்சத்து 37 ஆயிரத்து 061 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், இதுவரை 4லட்சத்து 12 ஆயிரத்து 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடியே 60 லட்சத்து 17 ஆயிரத்து 979 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.