சென்னை ஐஐடி மாணவருக்கு ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை வழங்கி அமெரிக்க நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் இன்டெர்வியூ / பிளேஸ்மெண்ட் எனப்படும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

இதில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு மாணவர்களின் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளமும் வேலையும் வழங்கி வருகிறது.

2024-25 கல்வி ஆண்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பிளேஸ்மெண்ட் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ஐஐடி-யில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு மாணவர்களை தேர்வு செய்து வருகிறது.

பிளாக்ராக், க்ளீன் & டா வின்சி, APT போர்ட்ஃபோலியோ, ரூப்ரிக், டேட்டாபிரிக்ஸ், எபுலியண்ட் செக்யூரிட்டிஸ், ஐஎம்சி டிரேடிங், குவாடேய், குவாண்ட்பாக்ஸ், கிராவிடன், DE ஷா, பேஸ் ஸ்டாக், ப்ரோக்கிங், , ஸ்கொயர்பாயிண்ட் கேபிடல், , மைக்ரோசாப்ட், கோஹெஸிட்டி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.

ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை மாணவர்களின் திறமைக்கு ஏற்ப சம்பளம் வழங்க இந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதில், சென்னை ஐஐடி-யில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர் ஒருவருக்கு நியூயார்க்கில் அமைந்துள்ள முதன்மையான வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனமான, ஜேன் ஸ்ட்ரீட் வருடத்திற்கு ரூ.4.3 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது.

இதுவரை ஐஐடி-யில் பிளேஸ்மெண்ட் மூலம் வழங்கப்பட்ட மிக பெரிய சம்பளமாக இது உள்ளது.