சென்னை: அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கியதில்  ரூ. 365.87 கோடி  அளவுக்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை சுட்டிக்காட்டி, பாஜக மாநில முன்னாள் தலைவர்  அண்ணாமலை . அமைச்சர் கே.என்.நேரு மீது  வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்களை நியமித்ததில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், பணியின் தன்மையைப் பொருத்து, ஒவ்வொருவரிடமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சப் பணம் கைமாறியதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

அமலாக்கத் துறை கடந்த 2025ம் ஆண்டு  அக்.27-ம் தேதி தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் , சென்னையில் ஒரு தனியார் நிறு​வனத்​தின் வங்கி மோசடி வழக்கு தொடர்​பாக சோதனை​கள் நடத்​தியதில் நகராட்சி நிர்வாகத் துறையில் அரசுப் பணி நியமனத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான ஆவணமும் சிக்கியது. அந்தவகையில், 2,538 பேரில் 150 பேரிடம் பணி​யின் தன்​மையை பொருத்து தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்​சம் வரை லஞ்​சம் பெற்றதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதில் அதி​காரமிக்க அரசியல்​வா​தி​களும், அவர்​களுக்கு நெருக்​க​மான நிறு​வனங்​களும் ஈடுபட்டுள்​ளனர்.

இதுதொடர்பான ஆவணங்களை, 232 பக்க கடிதத்​துடன் இணைத்​துள்​ளோம். இந்த முறை​கேடு தொடர்​பான விசா​ரணையை விரை​வில் டிஜிபி மேற்கொள்ள வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் ரூ.888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை துறையின் அமைச்சர் கே.என்.நேரு மறுத்தார். இந்நிலையில், தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு, தற்போது மீண்டும் ஒரு கடிதத்தை அமலாக்கத் துறை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்றதாக அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் கூறி அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சசர் கே.என்.நேரு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசுப் பணி வழங்க லஞ்சம் – ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் – ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் சாதனைகள். அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன.

ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள், ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்   கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன. தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது.

உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது  என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகராட்சி துறையில் அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல்! தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலம்…

அமைச்சர் நேரு துறையில் மேலும் ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை எழுதிய ரகசிய கடிதம் வெளியான விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை! தமிழ்நாடு அரசு

தமிழக அரசின் நகராட்சி துறையில் ரூ.888 கோடி பணி நியமன ஊழல் புகார்! ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தகவல்…

[youtube-feed feed=1]