டில்லி

டிப்போன தொழிலதிபர் விஜய் மல்லையா விடம் இருந்து ரூ.3600 கோடி மீட்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா நிதி மோசடியில்  தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆவார்.  இவர் தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் பல வங்கிகளில் வாங்கிய பல்லாயிரம் கோடிக்கணக்கான கடன்களை திருப்பி செலுத்தவில்லை.  இவர் கடந்த 2016 ஆம் அண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டுக்கு ஓடிப் போய் அங்கு வசித்து வருகிறார்.

அவருக்கு ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறை அளித்துள்ள 3 வருடத்  தண்டனையிலிருந்து அவர் பிணையில் வெளியே உள்ளார்.  அவரை ஏற்கனவே நாடு கடத்த அளிக்க உத்தரவு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.  பல ரகசிய காரணங்களுக்காக அது தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.   இது குறித்து நடைபெறும் ரகசிய நடவடிக்கைகள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இந்நிலையில் டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான பண மோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.  இன்றைய விசாரணையில் ஸ்டேட் வங்கியின் தலைமையில் இயங்கும் வங்கிகள் கூட்டமைப்பு விஜய் மல்லையாவிடம் இருந்து இதுவரை ரூ.3600 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ரூ.11,000 கோடி பாக்கி உள்ளதாகவும் தெரிவித்தன.

ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றம் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன பாக்கிக்காக அவருடைய சாராய நிறுவனமான யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்தை மூட தடை விதித்திருந்தது.   அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் எதிர்ப்பு மனுவை நிராகரித்துள்ளது.