அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கு  விசாரணையை நேரலை செய்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக முடங்கிய சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் படிப்படியாக தொடங்கி வருகின்றன. பல மாநிலங்களில் கொரோனா பரவல் பாதிப்பு குறைந்து வந்தாலும், அச்சம் காரணமாக நீதிமன்றங்களில் காணொலி வாயிலாக விசாரணை நடக்கிறது.
இதையடுத்து, அடுத்தகட்டமாக குஜராத்தில் முதல்முறையாக நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது.  நாட்டின்  வரலாற்றில் இப்படி வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும்.
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை ஜூம் செயலி மூலமாக விசாரித்து வருகிறது. விசாரணைகள் https://www.youtube.com/watch?v=WpqQWBERB_Y என்ற யூட்யூப் தளத்தில் நேரலையாக ஒளிப்பரப்பாகிறது.