சென்னை: அன்னதான திட்டத்தில் உணவுக்காக ஒருவருக்கு ரூ.35 ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளி யிட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.25 ஆக இருந்த நிலையில், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தற்போது ரூ.35 ஆக உயர்த்தி அறிவித்து உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோவில்களில் தினசரி 100 பேருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பக்தர்கள் மட்டுமின்றி, ஏராளமான ஏழைகளும் பயன்பெற்று வருகின்றனர். இந்த உணவுக்காக இதுவரை நபர் ஒன்றுக்கு ரூ.25 மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் உணவுப்பொருட்கள் விலைவாசியின்போது, முறையான உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது அதற்கான மானியத்தை தமிழகஅரசு உயர்த்தி உள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது,
அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் திருக்கோயில்களில் அனைத்து திருக்கோயில்களிலும் ஒரே மாதிரி யான திட்ட அனுமதி நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.25 வீதம் என வரையறுக்கப்பட்டு ஏற்கனவே அனுமதி வழங்கப் பட்டது. இத்திட்ட அனுமதி வழங்கி ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் தற்போதைய விலைவாசியின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு ரூ.35 வீதம் என திட்டம் வரையறுக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.
இதன்படி 100 நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3500 என்றவாறு செலவிட அனுமதிக்கப்படுகிறது. இனி ஒரு நபருக்கு ரூ.35 வீதம் 1000 பேருக்கு ரூ.3500 செலவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.