சென்னை:
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆரம்பத்தில் சில மணித்துளிகள் அமளி ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

தமிழக பட்ஜெட் அறிக்கையில் தமிழகத்திற்கு ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சி 6.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக உயரும்
வருவாய் பற்றாக்குறை: 15,994 கோடி
அரசின் செலவு: 175,357 கோடி
அரசு ஊழியர்களுக்கான சம்பளம்: ரூ.46,332 கோடி
ஓய்வூதியம்: ரூ.20,577 கோடி
கட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 7 ஆயிரம் கோடி பயிர்க்கடன்
கால்நடை பராமரிப்புக்கு ரூ.1.161 கோடி ஒதுக்கப்படும்
என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel