கோவை:

வுளித்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம்  கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

கோவையில் சிந்தடிக், ரேயான் ஜவுளி ஏற்றுமதியின் மண்டல அலுவலகம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மத்திய ஜவுளித்துறை ஆணையம் கவிதா குப்தா  திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது,  சர்வதேச ஜவுளி வர்த்தகத்தில் 150 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா பங்கு வகித்து வருகிறது என்று கூறினார். தற்போது இந்த 150 பில்லியனில் 110 பில்லியன் உள்நாட்டு வர்த்தகமாகவும், 40 பில்லியன் மட்டுமே வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது 2025ம் ஆண்டுக்குள் டபுளாக அதாவது 300 பில்லியன் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்,  நமது இலக்கை அடைய, பருத்தி நார் மற்றும் செயற்கை உற்பத்தி மற்றும் உற்பத்தி அளவு அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், புல்லட் ப்ரூப் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த ஆடைகளை தயாரிப்பதில் ஜவுளித்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்