டில்லி

டைக்கால நிதிநிலை அறிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசின் ஆயுட்காலம் மே மாதம் முடிவடைவதால் பாஜக அரசு இந்த காலகட்டத்துக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தேர்தல் வர உள்ளதால் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பல நலத் திட்டங்களும் வரித் தள்ளுபடிகளும் இருக்கலாம் என மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ரூ.15000க்கும் குறைவாக மாத வருமானம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பின் மாதம் ரூ. 3000 ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் இணைய விரும்புவோரிடம் இருண்டு மாதம் ஒரு சிறு தொகை வசூலிக்கப்படும். அரசின் சார்பில் அதே அளவு தொகை வழங்கப்படும். இந்த தொகையான அவர்களின் 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியமாக வழங்கப்பட்ட உள்ளது

திட்டத்தில் சேருவோரின் வயதைப் பொறுத்து மாதம் செலுத்த வேண்டிய தொகை மாறுபடும். இதன் மூலம் 10 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.