டெல்லி
தேசிய நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளில் வருடாந்திர பாஸ்கள் விலை ரூ. 3000 ஆகவும் வாழ்நாள் பாஸ்கள் ரூ. 30000 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது.
,மத்திய அர்சின் தேசிய நெண்டுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடிகளில் மாதாந்திர மற்றும் வாழ்நாள் பாஸ்கள் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது இந்த பாஸ்களுக்கான கட்டண விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்ப்டி வருடாந்திர பாஸ்களுக்கு ரூ. 3000 மற்றும் ஆயுட்கால பாஸ்களுக்கு ரூ. 30000 என வசூலிக்கப்பட உள்ளது. இதில் வருடந்ந்திர பாஸ்களில் ஆண்டு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலையிலும் எவ்வித இடைஞ்சலும் இன்றி பயணிக்க முடியும் வாழ்நாள் பாஸ்களில், 15 ஆண்டுகள் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் எவ்வித இடைஞ்சலும் இன்றி பயணிக்கலாம்
ம்த்திய தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த திட்டத்தை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தனியார் கார்களுக்கான கிலோமீட்டருக்கு சுங்கக் கட்டண விகிதத்தை மாற்றுவது குறித்தும் அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் சொல்லபடுகிறது.