தர்மபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட கிராம மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியை சந்தித்து டாஸ்மாக் கடை வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த விவகாரம் பரபரப்பைஏற்படுத்திய நிலையில், இந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண்களுக்க தலா ரூ.300 கொடுத்து கூட்டி வந்தது தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிலர் கொடுத்த பணத்தக்காக, தாங்கள் எஎந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்று, தங்களது பகுதிக்கு டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் என மனு கொடுத்துள்ள செயல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாரந்தோறும், தி்ங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதனப்டி, நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கலெக்டர் சாந்தி தலைமையில்நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆதனூர் பகுதியில் ‘டாஸ்மாக்’ மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். இது வியப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக தங்களது பகுதிகளில் மதுக்கடை வேண்டாம் என பெண்கள் போர்க்கொடி தூக்கும் நிலையில், இங்கு மதுக்கடை வேண்டும் என கொடி பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், தங்களை சிலர் ஆளுக்கு ரூ.300 தருகிறோம் என்று கூறி கூட்டி வந்ததாகவும், நாங்கள் எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம் என்று தெரிவித்து உள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்க ஏரியாவுல டாஸ்மாக் கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை! இது தர்மபுரி சம்பவம்