திண்டுக்கல்,

ரூ.3 கோடி மோசடி வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் நேரில் ஆஜரானார்.

கடந்த 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் செலவுக்காக வாங்கிய பணத்தில் ரூ.2 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700-ஐ திருப்பி வழங்கவில்லை என அவர்மீது திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சபாபதி என்பவர்  வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 15ந்தேதி நடைபெற்ற விசாரணை யின்போது, முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போது நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய தடை விதித்து,  முன்ஜாமீன் வழங்கி உத்தர விட்டார். மறு உத்தரவு வரும் வரை திண்டுக்கல் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, நத்தம் விஸ்வ நாதன் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.