தலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை

Must read

சென்னை:

ழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற  தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஏழைத் தொழிலாளர்களுக்கு  ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  சட்டப்பேரவையில் விதி 110ன் கிழ் அறிவித்தார். தொடர்ந்து,  இந்த மாதம் முதலே இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்பார்த்து, தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக கூறி,  அரசின்  அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரரணைக்கு வர உள்ளது.

விசாரணையை தொடர்ந்து, தமிழகஅரசு அறிவித்துள்ள ரூ.2000 சிறப்பு நிதி ஏழை மக்களுக்கு வழங்கப்படுமா அல்லது தடை செய்யப்படுமா என்பது தெரிய வரும்.

More articles

Latest article