சென்னை: கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
கரும்பு கொள்முதலில், தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன் ரூ.195 ஊக்கத்தொகை சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.3016 கொள்முதல் விலை வழங்கப்படும். ஆனால், கடந்த 2021-22 ஆம் ஆண்டின் கொள்முதல் விலையான ரூ.2905-யை விட ரூ.111 மட்டும் தான் அதிகம். இதுவும் கட்டுப்படியாகாது என விவசாயிகள் கூறி வருகின்றனர்.
ஆனால், 2022-23ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.1620 மட்டும் தான் என்று கணக்கிட்டு, அத்துடன் 88% லாபம் சேர்த்து நியாய மற்றும் ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மதிப்பீட்டின்படி ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.2,985 என தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்ஆர்கே ன்னீர்செல்வம், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகையினை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு ஊக்கத்தொகையினால், பொது, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் 2021-22 அரவைப் பருவதில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த, விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2950 ஆக கிடைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.‘