டெல்லி:
மிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் இருந்து,  மத்திய நிதி அமைச்சகம் ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகம் உள்பட  27 மாவட்டங்களுக்கு நிவாரண  நிதி ஒதுக்கப்பட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி,  தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தால், அதற்கான நிதி மத்திய அரசிடம் நிலுவையில் இருந்து வந்தது.  பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலை தமிழகஅரசு நடத்தியது. இதையடுத்து, உள்ளாட்சிக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என தமிழகஅரசு வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பாக 15வது நிதிக்குழு பரிந்துரை செய்த ஆலோசனையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும்,  வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரம் வழங்குவது உள்பட ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக  இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து மத்தியஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  15 வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது.
28 மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில்,  தமிழகத்துக்கு ரூ.295 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.816 கோடியும், பீகாருக்கு ரூ.502 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.330 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முத்ரா திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்க ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.