சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்டதும்,  சென்னையில் உள்ள சாலைகள் ரூ.250 கோடி செலவில் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை சாலைகளை சீரமைக்க கடந்த ஆண்டு (2023) மட்டும் ரூ.2250 கோடி செலவிடப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.250 கோடி சாலை சீரமைப்புகாக மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.

18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 4ந்தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, மாநில அரசு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, தேர்தல்  நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பிறகு ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு, சென்னையில் உள்ள  1250 சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

அதன்படி, 36 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் 1200+ உள் வீதிகள் மறுசீரமைக்கப்படும் என்றும், இதற்கான நிதி உதவி,  நாகலாபுரா சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் டூரிஃப் திட்டங்களின் கீழ்  வாயிலாக  ரூ.250-கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரோடுகளை சீரமைக்கும் பணி, ஜூன் மாதத்திற்குள் துவங்கி, மழைக்காலம் வரை  நடைபெறும் என்றும்,  தண்டையார்பேட்டை மண்டலத்தில் 153 சாலைகளும், அண்ணாநகரில் 133 சாலைகளும், வளசரவாக்கத்தில் 111 சாலைகளும், அடையாரில் 108 சாலைகளும் சீரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒதுக்கப்பட்டுள்ள ரூ.250 கோடியில்,  50 கோடி பேருந்து வழி சாலைக்கும், 200 கோடி உள் சாலைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றார்  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  “உள்துறை சாலைகளில், நீளம் மற்றும் அகலம் குறைவாக இருக்கும், எனவே குறைந்த பணத்தில் அதிக சாலைகளை  சீரமைக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய மாநகராட்சி அதிகாரிகள் , சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டுகளில் சாலைகளுக்கு போதிய மானியமும், அரசின் நிதியும் கிடைக்கவில்லை. நகரில் உள்ள அனைத்து சேதமடைந்த சாலைகளையும் சரி செய்ய சுமார் 1,700 கோடி தேவைப்படுகிறது. சென்னையில்,  ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட சாலைகள்  சீரமைக்கப்படாமல் உள்ளன. அவ்வாறு உள்ள சாலைகளை மாநகராட்சி கண்டறிந்து முதலில் சரி செய்யப்படும் என கூறியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில், வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்தது. பின்னர், 2023ம் ஆண்டு அக்டோபர் 5ந்தேதி, சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க மேலும் ரூ.1,230 கோடி ஒதுக்கீடு செய்து சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது (2024 ஏப்ரல்) ரூ.250 கோடி செலவில் மீண்டும் சென்னை சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் சாலைகளை சீரமைக்க ரூ. 2250கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த பணத்தைக்கொண்டு எவ்வாறு சாலைகள் சீரமைக்கப் பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தகவல்…

ஒரே ஆண்டுக்குள் 5வது முறை: சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க மேலும் ரூ.1,230 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாடு பட்ஜெட் 2024 – 25 : சென்னை சாலைகளை விரிவுபடுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு