சென்னை:
‘‘ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு’’ செய்யப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்குதலால் ஆயிரம் மின்கம்பங்களும், நூறுக்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரரத்து 500 மீட்டர் உயர் மின் அழுத்த பாதையும், 2 ஆயிரத்து 400 மீட்டர் குறைந்த மின் அழுத்த பாதையும் சேதம் அடைந்துள்ளது.
மின்கம்பங்களை மாற்றி, மின்பாதையை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று முதல் அவர்கள் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற நகரங்களில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நிவாரண பணிகளை முடுக்கி விட அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார் ஆகியோர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி ரூ 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 25 கோடி ரூபாயில் குமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.