டில்லி:

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான  கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாக  பரபரப்பு  செய்தி வெளியானது. இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது  விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அமலாக்கத் துறையும், சிபிஐ  வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,  கார்த்தி சிதம்பரத்தின் மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியதாக நேற்று செய்தி வெளியானது.

இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருள் நடராஜன் மறுப்பு செய்தி வெளியிட்டு உள்ளார்.

அதில், கார்த்தி ப.சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கியதாக இன்று வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல… இது பழைய செய்தி. 6 மாதங்களக்கு முன்பே பிறப்பிதத உத்தரவை, தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை ஊர்ஜிதம் செய்து இருக்கிறது. அவ்வவுதான். இது நீதிமன்த்தின் உத்தரவு அல்ல.

மேலும் இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே  இன்றும் இருக்கிறது. இதை எதிர்த்து திரு.கார்த்தி ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.