சென்னை:  மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பான ரூ. 200 கோடி வரி முறைகேடு அம்பலமான நிலையில்,  திமுக மேயர் இந்திராணியின் கணவர் கணவர்  பொன்வந்த் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொன்வசந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு நடைபெற்றுள்ளது  தெரிய வந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைமை வேண்டுகோளுக்கு இணங்க திமுகவைச் சேர்ந்த  5 மண்டலங்களைத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த வழக்கை மதுரை டி.ஐ.ஜி. அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.  வழக்கு தொடர்பாக, அரசு அதிகாரிகள் உள்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். ராஜினாமா செய்த மண்டல குழு தலைவர்களில் பலர் இன்னும் கைது செய்யப்படாத நிலை உள்ளது. இந்த நிலையில்,  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சென்னையில் முகாமிட்டிருந்த நிலையில்,   சென்னையில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொன்வசந்த் விசாரணைக்காக   மதுரை அழைத்து சென்றனர்.அதேபோல, தூத்துக்குடி உதவி ஆணையர் சுரேஷ்குமாரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் இவர் மதுரையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, சுரேஷ்குமாரையும் போலீசார் மதுரைக்கு விசாரணைக்காக அழைத்து வருகின்றனர். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.