மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி மோசடி பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி திமுக எமேயர் இந்திராணி பொன் வசந்த் தனதுரு பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த வரி மோசடியில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ராஜினாமா கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ள நிலையில், தற்போது மேயர் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நாளை துணை மேயர் தலைமையில் இந்திராணி பொன்வசந்தின் ராஜினாமாவை ஏற்பது தொடர்பான அவசர கூட்டம் நடைபெறுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, மதுரை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி பொன்வசந்த் என்பவர் இருந்து வருகிறார். இவர் தலைமையிலான மாநகராட்சி, வரி விதிப்பில் சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலைவர்கள் , 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில், தி.மு.க., மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினரே ஊழல் செய்ததாக ஒப்புக் கொண்டு, தி.மு.க., அரசே அவர் களை கைது செய்துள்ளது.
வரி மோசடி தொடர்பாக மதுரை காவல் சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 19 பேர் பணியிடை மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலிரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திமுக மேயர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழல் 2026 சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக தலைமை கருதுவதால், மேயர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும், அதன் காரணமாகவே இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரூ. 200 கோடி வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி திமுக பெண் மேயரின் கணவர் கைது…
ரூ.200 கோடி வரிவசூல் மோசடி: மதுரை மாநகராட்சியில் பெண் உள்பட மேலும் 3 பேர் கைது!
https://patrikai.com/rs-200-crore-tax-fraud-in-madurai-corporation-6-dmk-zonal-heads-resigned-due-to-cm-stalin-order/