மதுரை: மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி வசூல் மோசடி வழக்கில் , பெண் அலுவலர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது. இங்கு மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி இருந்து வருகிறார். இவர் தலைமையிலான மாநகராட்சி, வரி விதிப்பில் சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலைவர்கள் , 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த  நிலையில்,    தி.மு.க., மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினரே ஊழல் செய்ததாக ஒப்புக் கொண்டு, தி.மு.க., அரசே அவர் களை கைது செய்துள்ளது.

வரி மோசடி தொடர்பாக மதுரை காவல் சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஊழல் குற்றச்சாட்ட தொடர்பாக ஏற்கெனவே 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 19 பேர் பணியிடை மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி சொத்து வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக பெண் அலுவலர் உட்பட 3 பேரை, மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சொத்து வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த முறைகேடுக்கு காரணகர்த்தாவாக இருந்த திமுக  மேயர் மற்றும்  கவுன்சிலர்கள்  கைது செய்யப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் மேயர் இந்திராணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்,  அவர் உள்பட பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்து வருகின்றனர்.