ஈரோடு: வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில், ஈரோடு மாவட்ட அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில முக்கிய முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தியதுடன், வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.