டெல்லி: 2023 டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல்  ரூ.1.64.882 லட்சம் கோடி  என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும், கடந்த ஏப்ரம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில், 14 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளத.

பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு, வரி விகிதங்களை எளிமைப்படுத்தும் விதத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம்தேதி நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை  அமல்படுத்தியது. இந்த வரி முறை அமைல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகளை கடந்தும், தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் ஏற்படும் குறைகள் அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூடி விவாதித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த  புதிய வரி விதிப்பின் மூலம்ரூ.1.5 லட்சம் கோடி வரி வருவாய் உருவாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.  வரி ஏய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலும், பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பான,  பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிவரி விதிப்புக்குள் கொண்டு வர தமிழ்நாடு உள்பட மாநில அரசுகள் மறுத்து வருகின்றன. இதை விரைவில் ஜிஎஸ்டிக்குள்   கொண்டு வரவேண்டும் என்பதே வரி நிபுணர்கள் மற்றும் சாமானிய மக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், 2023ம் ஆண்டு  டிசம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி  மொத்த ஜிஎஸ்டி வரியாக ஒரு லட்சத்து 64 ஆய்ரத்து 882 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டில் தொடர்ந்து 7வது முறையாக ஜிஎஸ்டி வசூலானாது ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.  இந்த தொகையானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வசூலானதை காட்டிலும் 10.3 சதவிகிதம் அதிகமாகும்.

இதில் மத்திய ஜிஎஸ்டி ஆக 30 ஆயிரத்து 443 கோடி ரூபாயாகவும், மாநில ஜிஎஸ்டி ஆக 37 ஆயிரத்து 935 கோடி ரூபாயாகவும்,  ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக 84 ஆயிரத்து 255 கோடி ரூபாயாகவும் (ரூ. 41,534 கோடி வசூல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட) செஸ் வரியாக 12 ஆயிரத்து 249 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் சேகரிக்கப்பட்ட ரூ. 1,079 கோடி உட்பட) உள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய அரசின் பங்கிற்கு 40 ஆயிரத்து 57 கோடியும் ரூபாயும், மாநில அரசுகளுக்கான பங்காக 33 ஆயிரத்து 652 கோடி ரூபாயாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கமான தீர்வுக்குப் பிறகு டிசம்பர் 2023 இல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் முறையே 70,501 கோடி, ரூ.71,587 கோடியாக உள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூலானது, முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தைவிட 12 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன்படி 9 மாதங்களில் ரூ.14 லட்சத்து 97 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளது. ஏப்ரல்-டிசம்பர் 2022 காலகட்டத்தில் ரூ. 13 லட்சத்து 40 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.