டெல்லி: 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மாலை 5:00 மணி வரை நிலவரப்படி, ஜனவரி மாத ஜி. எஸ். டி. வசூல் ரூ.1,55,922 கோடி என நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டி, நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.55 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஜனவரி வசூல் 155 கோடியை தாண்டி உள்ளது.
2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மாலை 5:00 மணி வரை நிலவரப்படி, ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,55,922 கோடி வசூலாகி உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது, இதில் மத்திய ஜி.எஸ்.டி.,28,963 கோடி, மாநில ஜி.எஸ்.டி., ரூ.36,730 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.79,599 கோடி. செஸ் ரூ.10,630 கோடியாகவும் (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.768 கோடி உட்பட) உள்ளது.
இதுவரை வசூலான ஜிஎஸ்டி வசூலில், கடந்த 2022 ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியாக இருந்ததே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.