ட்டி

மிழக சுற்றுல்லத்துறையின் மூலமாக ரூ.1500 கோடி வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கா ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமை வகித்தார்.  விழாவின் சிறப்பு விருந்தினர்களான நீலகிரி எம்.பி. ஆ.ராசா, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் கா.ராமச்சந்திரன் தனது உரையில், “கடந்த 2 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் 349 பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கட்டணமில்லா பேருந்து மூலமாக, 48 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன்படி, ரூ.5 கோடியில் பல்வேறு சாகச விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் ரூ.125 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.

மொத்தத்தில் தமிழகம் முழுவதும் ரூ.1,500 கோடியில் சுற்றுலாத் துறை மூலமாக, பல்வேறு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.  அவற்றில் ஒன்றாகக் கூடலூர் அருகே தேவாலா தோட்டக்கலைத் துறை பண்ணையில் ரூ.3 கோடியில் சுற்றுலாத் தலம் அமைக்கப்படவுள்ளது. மேலும் தொட்டபெட்டா முதல் மந்தாடா வரை ரோப் கார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டி பைக்காரா அணையில் 200 பேர் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில், மிதவை உணவகம் அமைக்கப்படவுள்ளது. நடுவட்டம் பகுதியிலுள்ள பழமை வாய்ந்த சிறைச்சாலை புனரமைக்கப்பட்டு,  அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.  தவிர குன்னூர் பகுதியிலுள்ள டால்பின்நோஸ், பக்காசூரன் மலை, லேம்ஸ்ராக் ஆகியவை மேம்படுத்தப்படும்” எனத் தெரிவித்த்துள்ளார்.