சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட உள்ள முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ.11.56 கோடி நிதியை தமிழகஅரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உளளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. நாளை மறுதினத்துடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. வாக்குப்பதிவையொட்டி, வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தி வருகிறது .
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் செய்யக்கூடிய முன்னேற்பாடுகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. குடிநீர் வசதி, மின்சாரம், பர்னிச்சர் வசதிகளுக்காக ஒதுக்கியுள்ள நிதியை வங்கி ஆன்லைன் மூலம் மட்டுமே பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.