தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றிய அமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவரை 2.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் எஞ்சினியரிங் சேரும் மாணவர்களிடம் டி.என்.இ.ஏ. கவுன்சலிங் விண்ணப்பம் செய்யும் போதே 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படித்த பள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

மற்றவர்களுக்கும் இதுபோல் பள்ளி விவரங்களை சேகரித்து சரிபார்க்கும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திட்டம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.