டெல்லி:

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் டெல்லி மாநில அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  கொரோனா தொற்று பரவலில் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. டெல்லியின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கடந்த மாதம் அங்கு நடைபெற்ற இமாம் தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாடு கண்டறியப்பட்டது.

இந்த மாநாட்டில் பல வெளிநாட்டினர் உள்பட நமது நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், பெரும்பாலோருக்கு கொரோனா தொற்று பரவியது தெரிய வந்தது.

இதற்கிடையில், தப்லிகியின் நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை காவல்துறையினர் டிரேஸ் செய்து, அவர்களை கண்டறிந்து கொரோனா சோதனை செய்து, தனிமைப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா எச்சில் மூலம் பரவி வரும்நிலையில், மாநாட்டில் கலந்துகொண்டவர்களை அழைத்துச் செல்ல வரும் காவல்துறையினர் மீது,   பல இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே எச்சல் துப்பி அவமானப்படுத்தி வந்தனர். அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதித்துள்ள டெல்லி மாநில அரசு, மீறி எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது.

இது குறித்து NDMC வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மதுபானம், குட்கா, புகையிலை போன்றவற்றை விற்பனை செய்வதற்கு கடுமையான தடை இருக்க வேண்டும், துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். எந்தவிதமான துப்பலும் இருக்கக்கூடாது.

பொது இடங்களில் சிறுநீர் கழித்தல். மேற்கூறிய உத்தரவை மீறியதற்கு பொறுப்பான நபர்களுக்கு ரூ .1000 அபராதம் விதிக்கப்படும்”.

“மேற்கூறிய உத்தரவு வெளிப்படையாக திரும்பப் பெறப்படும் வரை நடைமுறையில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.