சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு பாடத ரூ.1000 நிதியுதவி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை தமிழகஅரசு செய்து வருகிறது. மேலும் வேலைவாய்பிலும் முன்னுரிமை வழங்கி வருகிறது. இந்த நிலை யில், மாற்றுத்திறனாளிகளின் உதவிக்கு செல்லும் உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.

இதுகுறிதுது வெளியிடப்பட்டள்ள அரசாணையில்,  அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்து கொள்ளும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க ரூ.90.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் முதல் 2021 ஜூலை வரை கண்டறியப்பட்ட 757 பயனாளர்களுக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.