சென்னை; டாஸ்மாக் டெண்டரில் 1000 கோடியில் ஊழல்? என அறப்போர் இயக்கம்  அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டி உள்ளது.  ஊழலுக்காக போடப்படும் 1000 கோடி டாஸ்மாக் பாக்ஸ் டெண்டர்கள் ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுப்பி உள்ளது.

இ-டெண்டர் போடாமல் தொடர்ந்து பாக்ஸ் டெண்டர் போடும் டாஸ்மாக்கின் அமைச்சர் செந்தில் பாலாஜி, இ- டெண்டர் போடாமல் அவர் துறையில் வேண்டுமென்றே பாக்ஸ் டெண்டர் போடுவதன் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு கூற வேண்டும் என அறப்போர் இயக்கம் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளருக்கு  கடிதம் அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,, டாஸ்மாக்கில் குடோனில் இருந்து கடைகளுக்கு எடுத்து செல்லும் போக்குவரத்து டெண்டர்கள் மண்டல ரீதியாக 43 டெண்டர்கள் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் போடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த டெண்டர்கள் அனைத்தும் ஈ-டெண்டர்களாக போடப்படாமல் பாக்ஸ் டெண்டர்களாக போடப்பட்டுள்ளது. டெண்டர் ஆவணம் மட்டுமே இணையதளத் திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் . ஆனால் டெண்டர் ஆவணங்களை நேரில் சென்று தான் சமர்ப்பிக்க முடியும்.
நாங்கள் முழுமையான ஈ டெண்டர் கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே பல துறைகளில் நடைமுறையில் இருக்கும் ஈ டெண்டர் முறையை கூட பின்பற்றாமல் பாக்ஸ் டெண்டர் ஆக போட்டு அதன் மூலம் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு இந்த டெண்டர்களை வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது.
இன்று முடிவடைந்து நாளை திறக்க போகும் இந்த டெண்டல்களை உடனே ரத்து செய்துவிட்டு முழுமையான ஈ டெண்டர்களாக இந்த டெண்டர்கள் விடப்பட வேண்டும் என்ற புகாரை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளது.
ஈ டெண்டர் போடாமல் தொடர்ந்து பாக்ஸ் டெண்டர் போடும் டாஸ்மாக்கின் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈ டெண்டர் போடாமல் அவர் துறையில் வேண்டுமென்றே பாக்ஸ் டெண்டர் போடுவதன் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு கூற வேண்டும்.
பாக்ஸ் டெண்டர் ஊழலுக்கு வழிவகை செய்யக்கூடியது என்பது நன்றாகத் தெரிந்தும் அவர் துறை ஏன் இதைத் தொடர்ந்து செய்கிறது என்பதை கூற வேண்டும். தமிழ்நாடு அரசு உடனே இந்த டெண்டர்களை ரத்து செய்து முழுமையான ஈ டெண்டர்களை போட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.