நெட்டிசன்:
பத்திரிகையாளர்:  ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு…

தமிழ்நாடு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், “கொரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே நேரில் போய் அரசின் உதவித்தொகையை வழங்க முடியும், மற்றவர்கள் நியாய விலைக்கடைகளுக்கு நேரில் தான் வரவேண்டும்” என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையால், வருகிற 22 ம்தேதி வீடுதேடி ஆயிரம் ரூபாய் வருவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் உணவுத்துறை அமைச்சர் திரு.காமராஜ், இந்த அறிக்கை வந்த ஒரு மணி நேரத்தில், “பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று (சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்) உதவித் தொகை வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை; திட்டமிட்டபடி வழங்கப் படும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மட்டுமே இந்தப் பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்ற நிலையில், அவர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமைதான் என்றளவில் அவர்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது…

பணிச்சுமையைக் குறைக்க (man power) ஆட்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக அதிகப்படுத்தித் தரும்படி வேண்டுமானால் கோரலாம் !

கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களையும் கேட்கலாம்… சென்னையில் பல ரேசன் கடைகளே, “தீவிர கொரோனாகட்டுப்பாட்டு பகுதி” களில்தான் இருக்கிறது, என்பதையும் கவனத்தில் கொண்டால்; மக்களின் நலன் என்பது, வீடுதேடிப்போய் உதவி வழங்குவதையே சரி என்று சொல்லும் ! அதைத்தான் அமைச்சர் காமராஜ் சொல்லியிருக்கிறார்…