செங்குன்றம்: மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை குறித்து வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆலந்தூர் பாரதி உறுதி கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்து உள்ள நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கொரோனாவால் ஏற்பட்ட  இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்கு  திமுக அரசு ரூ. 4000 வழங்கியது  என்பதை சுட்டிக்காட்டியதுடன், ஏற்கனவே திமுக அறிவித்துள்ளபடி,  மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக உள்ளது. பெண்கள் அத்தொகையை வங்கியில் வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் உறுதியளித்தார்.

மேலும், இங்குள்ள  18வார்டுகளில் உள்ள திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என  என்று வேண்டுகோள் விடுத்தவர், செங்குன்றம் பகுதியில் 1500கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்,  நாரவாரிக்குப்பம் பேரூராட்சி விரைவில் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் எனவும்  வாக்குறுதி அளித்தார்.