சென்னை: தமிழக பட்ஜெட்டில், நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி; மகளிர்சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.20ஆயிரம் கோடி கடன் உள்பட  2,89,877 வீடுகள் கட்ட திட்டம் உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த நிலையில், முதல் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லாத வகையில் இ-பட்ஜெட்டாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை சபை கூடியதும், காலை 10 மணி அளவில் சட்டப்பேரவைக்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

79,395 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவர் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும். 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும். கிராமப்புறங்களில் உள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உட்பட ரூ.20ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்

மகளிர் சுய உதவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் .

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

2021-22 ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும்

கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்

ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தபடும்.

ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு

ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரு.300 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3 கோடி அளிக்கப்படும்