சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்,  கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை வியாசர்பாடி பிரியா உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணயின் கூறியுள்ளார்.

சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. கால்பந்து வீராங்கனையான இவர் கால்பந்து விளையாட்டில்  தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.

சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்து. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால், அவருக்கு அங்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக மேலும் வலி ஏற்பட்டது.

இதனால் மேல்சிகிச்சைக்காக பிரியா  மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 8ந்தேதி சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட எஸ்ஸ்ரே சோதனையில், அவருடைய  காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.  ஆனால், அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையாமல், பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு நள்ளிரவு உயிரிழந்ததார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். . மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம். அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிகைக்கை விடுத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணயின் உடனே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு உயிரிழந்த மாணவி பிரியா, முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவி பிரியாவை வேறு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என விசாரிக்கப்படும். என்ன தவறுகள் நடந்துள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிரியாவுக்கு சிகிச்சையின்போது ரத்த நாளங்கள் பழுதானதால் பிரியாவில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.  ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் ரத்த ஓட்டம் நின்றுள்ளது. இதனால் அவரது  ஈரல், இதயம் என உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக அவருக்கு  அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்படுட உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்த வீராங்கனை பிரியா  குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என கூறினார்.