சேலம்: சேலம் நெடுஞ்சாலையில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின்போது,  ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆங்காங்கே காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றன. இந்த சோதனையின்போது பல கோடி மதிப்புள்ள குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. அதுபோல, சேலத்தில் காவல்துறையினர் நேற்று இரவு முதல் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

சேலம் அம்மாபேட்டை, புறவழிசாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது இரண்டு வாகனங்களில் வந்தவர்கள், போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசாரி, அந்த வாகனங்களை சோதனையிட்டனர். அதனுள், மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 7,300 கிலோ குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதன் மதிப்பு ரூ.1 கோடி என தெரிவித்துள்ளனர். குட்கா  கடத்தி வந்த வாகனத்தையும் போலீசாரை பறிமுதல் செய்துள்ளனர். காரில் வந்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.