ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு இலவசங்கள், பணம் வாரி இறைக்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக ராஜேஸ் கண்ணன் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டர் அதகளப்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்ளிலும் வைரலாகி வருகிறது. நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் உள்பட அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட, பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி யுள்ளனர். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கும் பணியுடம், தமிழக அமைச்சர்கள் குழுவே அங்கு முகாமிட்டு பணியாற்றி வருகிறது. இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.
,இடைத்தேர்தலில் வாக்காளர்களின் ஒட்டை கவரும் வகையில், குக்கர், ஹாட்பாக்ஸ், வேட்டி சேலை, உணவுப்பொருட்கள், இறைச்சி உள்பட பல்வேறு இலவசங்கள் வாரியிறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு ஒன்றுக்கு ரூ.2000 ஆயிரம் முதல் 5ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இடைத்தேர்தலுக்காக ஆளுங்கட்சி குறைந்தபட்சம் ₹ 300 கோடி செலவிடப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், வாக்காளர்களுக்க இலவசங்கள் கொடுப்பது தொடர்பாக ஏராளமான புகார்கள் கொடுத்தும், தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ள வில்லை. ஆனால், தேர்தல் ஆணையரோ அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என மறுத்து வருகிறது.
இந்த நிலையில், கரூரை சேர்ந்த ராஜேஸ் கண்ணன் என்ற பெயரில், அவரது போட்டோவுடன், நானும் தமிழர் என்ற பெயரில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டரில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும், நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
‘கதவைத் திறந்தால் காத்திருக்கும் பரிசு’: இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாடல்…