சென்னை: பாதுகாப்பு மிகுந்த சென்னையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மர்ம கும்பல் ஒன்று திருவான்மியூர் மாடி ரயில் நிலைய டிக்கெட் கவுண்டருக்குள் இருந்த டிக்கெட் விற்பனையாளரை கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில்சேவை நடைபெற்று வருகிறது. தினசரி லட்சக் கணக்கானோர், மென்பொருள் நிறுவனங்களுக்கு செல்வதற்காக திருவான்மியூர் ரயில்நிலையத்தில் ஏறி, இறங்கி சென்று வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பயணிகள் கூட்டம் இல்லை.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்று திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்குள் புகுந்கு, அங்கு பணியில் இருந்த டிக்கெட் விற்பனை செய்யும் ஊழியரை கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த அனைத்து பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, ரயில்வே ஊழியரை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவத்தில் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ. 1.32 லட்சம் கொள்ளை போனதாக கூறப்படு கிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.