டெல்லி: மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடி என்றும், இது 2020-21ம்நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான மத்தியஅரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு என்று ஜிஎஸ்டி வரியை கடந்த 2017ம் ஆண்டு அமல்படுத்தியது. சாதாரண சாலையோர வியாபாரி உள்பட அனைவரையும் வரி கட்டும் வகையில் தொல்லைப்படுத்தி வருகிறது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், கட்ந்த ஆண்டு கொரோனா பொதுமுட்க்கம் காரணமாக வருவாய் இழந்த நிலையில், மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், 2021ம் ஆண்டு கடந்த மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. யாக ரூ.1.23 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ.11.36 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகியுள்ளது.
2020 ஏப்ரல் ரூ. 32,294 கோடி
மே ரூ. 62,009 கோடி
ஜூன் ரூ. 90,917 கோடி
ஜூலை ரூ. 87,422 கோடி
ஆகஸ்ட் ரூ. 86,449 கோடி
செப்டம்பர் ரூ. 95,480 கோடி
அக்டோபர் ரூ.1,05,155 கோடி
நவம்பர் ரூ.1,04,963 கோடி
டிசம்பர் ரூ.1,15,174 கோடி
2021 ஜனவரி ரூ.1,19,847 கோடி
பிப்ரவரி ரூ.1,13,143 கோடி
மார்ச் ரூ.1,23,902 கோடி
2020-21ம் நிதிஆண்டில் மொத்தம் ரூ.11,36,755 கோடி வருவாய் ஜிஎஸ்டி மூலம் கிடைத்துள்ளது.