பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .

தற்போது நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கொரோனா இரண்டாம் அலையால், இந்த முறையும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீடு 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான வருவாய் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை. ஆர்ஆர்ஆர் படத்தின் அனைத்து மொழி 300 கோடிகளுக்கு மேல் (சுமார் 325 கோடிகள்) விலை பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையை Zee5 கைப்பற்றியுள்ளது .

ஆர்ஆர்ஆர் வெளியீட்டுக்கு முன்பே 850 முதல் 875 கோடிகள்வரை நிச்சயம் சம்பாதிக்கும் என்கிறார்கள். இது நடந்தால் படவெளியீட்டுக்கு முன்பே 450 – 475 கோடி லாபம் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுக்கு வந்து சேரும்.

https://twitter.com/LetsOTT/status/1395724124706672642