எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடிக்க தெலுங்கில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர்.

தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஜனவரி 7 ம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் ட்ரெய்லர் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன் வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ரிலீசாகவிருக்கும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி, பாகுபலிக்குப் பிறகு இந்திய அளவில் ரசிகர்களிடம் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெரும் என்று கூறினார்.

ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

[youtube-feed feed=1]