காணாமல் போன பச்சைக்கிளியை கண்டுப்பிடித்து தருபவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும் என அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூரில் வசித்து வருபவர் அரச பரம்பரையை சேர்ந்த சனம் அலி கான். இவர் அங்குள்ள காஸ் பாக் அரண்மனையில் வசித்து வருகிறார். சனம் தனது செல்லப்பிராணியாக ‘மித்து’ அல்லது ‘பாலி’ என்று அழைக்கப்படும் பச்சைக்கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த கிளி மீது சனம் தனது உயிரையே வைத்திருந்தார்.
சனம் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரியிடம் ஸ்கைப் மூலம் பேசும்போது பச்சைக்கிளியும் அவருடன் சேர்ந்து உரையாடும். செல்போனின் திரை வழியாக ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுடன் பேசும் கிளி மிகவும் புத்திசாலித்தனம் நிறைந்தது என தனம் அடிக்கடி கூறி வருவதுண்டு.
இந்நிலையில் சனம் தனது குடும்பத்துடன் டெல்லிக்கு பயணம் சென்றபோது பாலி கிளி பறந்து சென்று விட்டது. அதனை எங்கு தேடியும் காணவில்லை. பறந்து சென்ற கிளியை தேடி அலைந்த சனம் மிகுந்த மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர். தனது கிளி மீண்டும் வந்து சேர வேண்டுமென இறைவனை சனம் பிரார்த்தனை செய்து வருகிறார்.
இதற்கிடையே காணாமல் போன செல்லக் கிளியை கண்டுப்பிடித்து தருவோருக்கு ரூ.20,000 பரிசாக அளிக்கப்படும் என அரச குடும்பம் அறிவித்துள்ளது. அரச குடும்பத்தின் செல்லக்கிளியை கண்டுப்பிடித்து தருவோருக்கு பரிசு அளிக்கப்படும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.